
சென்னையில் செவ்வாய்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.33,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாக குறைந்தது. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, சவரன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக,சென்னையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.41 குறைந்து ரூ.33,536-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.41 குறைந்து, ரூ.4,192 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.68.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.68,500 ஆகவும் விற்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,192
1 சவரன் தங்கம்...............................33,536
1 கிராம் வெள்ளி.............................68.50
1 கிலோ வெள்ளி.............................68,500
திங்கள்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,233
1 சவரன் தங்கம்...............................33,864
1 கிராம் வெள்ளி.............................69.50
1 கிலோ வெள்ளி.............................69,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.