கூத்தாநல்லூர்: முகக் கவசத்தை மறந்த மக்கள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பொதுமக்கள் முகக் கவசத்தை மறந்து கவலையின்றி சுற்றுகிறார்கள். 
முகக் கவசத்தை மறந்த மக்கள்
முகக் கவசத்தை மறந்த மக்கள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பொதுமக்கள் முகக் கவசத்தை மறந்து கவலையின்றி சுற்றுகிறார்கள். 

சீனாவில் உருவெடுத்த கரோனா உலகமெங்கும் சுற்றிச் சுழன்றது. பல கோடி மக்களை கரோனா தொற்று தாக்கியது. பல இலட்சம் உயிர்களை உட்கொண்டது கரோனா. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் கரோனாவின் சீற்றம் குறைந்தபாடில்லை. மாறாக கரோனாவின் தாக்கம் புது மாதிரியாக உருமாறி, கஜா புயல், சுனாமி போன்று சீற்றம் கொண்டு தாக்கத் தயாராகிவிட்டது. 

புது மாதிரியாக உருமாறிய கரோனாவின் சீற்றத்தை மக்கள் அச்சம் கொள்ளாமல் பாதுகாப்பில்லாமல் அலைகிறார்கள். ஒரு பக்கம் கடும் சுட்டெரிக்கும் வெய்யில். மறுபக்கம் தேர்தல் கனல். அதனால் முகக்கவசவம் அணியாமலும், இடைவெளி இல்லாமலும் பாதுகாப்பற்ற நிலையில் மக்களின் கூட்டம். அரசியல் தலைவர்களே முகக்கவசத்தை அலட்சியப்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு இதே நாளில் ஊரடங்கில் இருந்தோம். இப்போது, புது மாதிரியாக உருமாறிய கரோனாவின் தாக்கத்திற்கு வழிவிட்டு, இணைந்து நிற்கின்றோம். இந்த பாதுகாப்பற்ற தன்மையின் முடிவு சோகத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவாகும்.

இந்நிலையில், தமிழகத்தில், மீண்டும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் முக்கிய மாவட்டமாக உள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப் புறப் பகுதியில், பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதேயில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கிடையாது. வர்த்தகர்களும், வணிகர்களும், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் முகக்கவசம் அணியாமல்தான் பாதுகாப்பற்ற வகையில்தான் விற்பனைகள் செய்யப்படுகின்றது.

எதிர்வரும், துணிந்து வந்து கொண்டேயிருக்கும் கரோனாவின் கொடூரத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் கவனத்தில் எடுத்துக்கொண்டது போலத் தெரியவில்லை. பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளிடம் உத்தரவிட்டது மாதிரியும் தெரியவில்லை.

கரோனா விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். புது மாதிரியான உருமாறிய கரோனாவின் சீற்றத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com