கூண்டில் ரிவால்டோ யானை
கூண்டில் ரிவால்டோ யானை

முதுமலை புலிகள் காப்பகத்தில் ரிவால்டோ யானை கூண்டில் அடைக்கப்பட்டது

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் வளர்ப்பு பிராணி போல மக்களுடன் இனக்கமாக பழகிவந்த ரிவால்டோ ஆண் காட்டு யானை சிகிச்சைக்காக கரால் எனப்படும் கூண்டில் புதன்கிழமை காலை அடைக்கப்பட்டது.
Published on


கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் வளர்ப்பு பிராணி போல மக்களுடன் இனக்கமாக பழகிவந்த ரிவால்டோ என்றழைக்கப்படும் ஆண் காட்டு யானை சிகிச்சைக்காக கரால் எனப்படும் கூண்டில் புதன்கிழமை காலை அடைக்கப்பட்டது.

யானை தந்தத்தின் அருகே ஏற்பட்ட்டிருந்த காயத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க வனத்துறை தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது முகாமுக்கு செல்ல மறுத்து தனது வசிப்பிடத்திற்கே திரும்பி வந்துவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் அதன் வசிப்பிடமான வாழைத்தோட்டம் பகுதியிலேயே கரால் அமைத்து கடந்த நான்கு நாள்களாக பழம், கரும்பு உள்ளிட்ட அதன் விருப்ப உணவுப் பொருள்களை கராலுக்குள் வைத்தனர். ரிவால்டோவும் தனது வீட்டுக்குள் செல்வது போல கராலுக்குள் சென்று தனது விருப்ப உணவுகளை உண்டு மகிழ்ந்தது.

தன்னை கூண்டிலடைக்கிறார்கள் என்ற பயமின்றி சொந்த வீடு போல பழகி போல கராலுக்குள் சென்று  வந்த ரிவால்டோ புதன்கிழமை காலை   கூண்டில் அடைத்தனர். இனி அதற்கான சிரிச்சை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com