

மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.இதையடுத்து அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு வார்டில் தனி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.