கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருவதையடுத்து, தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம்தேதி வரை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை மே 10-ஆம்தேதி முதல் 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா பரவலை தடுப்பதற்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுப்போக்குவரத்துக்து தற்காலிகமாக தடை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, மெட்ரோ ரயில்சேவை வரும் திங்கள்கிழமை (மே 10) அதிகாலை 4 மணி முதல் மே 24-ஆம் தேதி வரை அதிகாலை 4 மணி வரை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.