சென்னையில் 4 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்
சென்னை அம்பத்தூர், அண்ணா நகரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு

சென்னையில் கரோனா பாதிப்பு
சென்னை அம்பத்தூர், அண்ணா நகரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சென்னை மாநகராட்சி இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 4,04,733 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,713 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 5,368 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 4,04,733 பேரில் 3,61,652 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று(மே 11) மட்டும் 29,770 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூர், அண்ணா நகரில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...