கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ரெம்டெசிவிர் உள்ளிட்டவைகளை தமிழகத்தில் கூடுதலாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:14 pm

DIN

ரெம்டெசிவிர் உள்ளிட்டவைகளை தமிழகத்தில் கூடுதலாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா 2ஆவது அலையால் தமிழகத்தில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தினமும் 32,000 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொற்று அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கை வசதிகளின் தேவை ஆகியன அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மருத்துவமனைகளில் சேர நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். எனவே, தமிழகத்துக்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக விநியோகிக்க வேண்டும், தமிழகத்துக்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.