
பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் பழைய ஆயக்கட்டில் 6 ராஜ வாய்க்கால் பகுதிகளிலுள்ள 4686 ஏக்கர்கள் பயன் பெற உள்ளது. இது 135 நாள்களுக்கு இடைவெளிவிட்டு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதனால் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.