ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்த ஆணையை பிறப்பித்துள்ளார். 
Published on

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்த ஆணையை பிறப்பித்துள்ளார். 

அதன்படி, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்பில் முன்னதாக பங்கஜ் குமார் என்பவர் இருந்தார். 

முன்னதாக ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின்னர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலராக இருந்த அவர் தமிழக ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com