விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி தடுப்பூசி பெற ஏற்பாடு

மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :16 மே 2021, 2:34 pm

DIN

மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல் தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, • அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

• அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

• அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.

தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.