போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மின் கணக்கீட்டு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: நுகா்வோர் குழுமம் கோரிக்கை

மின் கணக்கீட்டு உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :20 மே 2021, 10:31 am

சிதம்பரம்: மின் கணக்கீட்டு உத்தரவை தமிழ்நாடு மின்சார வாரியம் திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்குழும செயலாளர் சி.டி.அப்பாபு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

தற்போது தமிழகம் முழுவதும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் கணக்கீடு செய்யாமல், கடந்த மாதம் மின் பயன்பாட்டின் கட்டணம் 2019/ மே மாதம் கட்டணத்தை வசூல் செய்யும்படி உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மின் நுகா்வோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர். 2019ல் அதிகமாக பயன்பாட்டில் இருந்திருக்கலாம், தற்போது குறைவாக இருக்கலாம். இவா்கள் தேவையில்லாமல் கூடுதலாக தொகை செலுத்த நேரிடும் நிலை உள்ளது.  

2019ல் குறைவாகப் பயன்பாட்டில் இருந்திருக்கலாம், தற்போது அதிகமாக இருக்கலாம். இவா்கள்  பழய கட்டணம் கட்டும்போது பின்பு கணக்கீடும் போது இவா்களுக்கு மீட்டா் ரீடிங் கூடுதலாக இருக்கும். இதனால் இவா்கள் கூடுதல் தொகை செலுத்த நேரிடும். எனவே, அனைத்துத் தரப்பிலும் பாதிக்கப்படும் இது போன்ற உத்தரவை தமிழக மின்வாரியம் திரும்பப் பெற வேண்டும். தற்போது கடந்த மாதம் கணக்கீட்டை இம்மாதம் கட்டணமாக செலுத்த உத்தரவு போட வேண்டும் என்கிறார் சி.டி.அப்பாவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.