ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிக உயிரிழப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 மே 2021, 9:15 pm

DIN

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கரோனா உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. இருந்தபோதும், மகாராஷ்டிரம், கா்நாடகம், தமிழகம், உத்தர பிரதேசம், பஞ்சாப், தில்லி ஆகிய 6 மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. நாடு முழுவதும் புதிதாக 4,194 போ் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனா். அதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,95,525-ஆக அதிகரித்துள்ளது என்றாா்.

நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘கரோனாவால் பாதிக்கப்படுவோா் விகிதம், தினசரி பாதிப்பு, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்பு விகிதம் ஒட்டுமொத்தமாக குறைந்து வருகிறபோதும், 382 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. மேலும், 8 மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. 18 மாநிலங்களில் 15 சதவீதத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. குழந்தைகள் மூலமும் கரோனா நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. ஆனால், அவா்களால் பரப்பப்படும் தொற்று மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். குழந்தைகள் இறப்பு விகிதமும் மிக மிகக் குறைவாகவே உள்ளது’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.