ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்கள் நியமனம்

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 9-5-2021 அன்று காலை 11-30 மணியளவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அமைச்சர் பெருமக்கள் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நிலவும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதல்வர் நியமித்துள்ளார். 
அதன் விவரம், பின்வருமாறு:
சென்னை மாவட்டம்
மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம்
தா.மோ. அன்பரசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர்
கோயம்புத்தூர் மாவட்டம்
அர. சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
கா. ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர்.
திருவள்ளூர் மாவட்டம்
சா.மு. நாசர், பால்வளத் துறை அமைச்சர்
மதுரை மாவட்டம்
பி. மூர்த்தி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
தூத்துக்குடி மாவட்டம்
கீதா ஜீவன், சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
சேலம் மாவட்டம்
வி. செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திருச்சி மாவட்டம்
கே.என். நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
திருநெல்வேலி மாவட்டம்
தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர்
ஈரோடு மாவட்டம்
சு. முத்துசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர்.
காஞ்சிபுரம் மாவட்டம்
எ.வ. வேலு, பொதுப் பணித் துறை அமைச்சர்
திருப்பூர் மாவட்டம்
மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்
வேலூர் மாவட்டம்
துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர்.
விழுப்புரம் மாவட்டம்
க. பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சர்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.
கடலூர் மாவட்டம்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர்
சி.வி. கணேசன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்
சிவ.வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆர். காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
தஞ்சாவூர் மாவட்டம்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
தேனி மாவட்டம்
இ. பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர்.
கன்னியாகுமரி மாவட்டம்
த. மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com