கரோனா தடுப்புப் பணி: 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
கரோனா தடுப்புப் பணி: 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று (27.5.2021) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் &டவ;ரோடு ஆகிய மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, கரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்கவும், இம்மூன்று மாவட்டங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை நியமித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 
உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மு.அ.சித்திக், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/ஆணையர், வணிகவரித் துறை,
திருப்பூர் மாவட்டத்திற்கு சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை செயலாளர், ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரித் திட்டஇயக்குநரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com