கடைகள், நிறுவனங்களை திறக்க அனுமதி: வியாபாரிகள் சம்மேளனம் கோரிக்கை
கடைகள், வியாபார நிறுவனங்களையும் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வியாபாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.


கட்டுமானத் தொழில் மற்றும் தொழிற்சாலைகளை படிப்படியாக திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளதுபோல, கடைகள், வியாபார நிறுவனங்களையும் படிப்படியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய வியாபாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தங்கள் கோரிக்கைகளை பரிசீலனைசெய்யக்கோரி தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பைஜால் மற்றும் தில்லி முதல்வா் கேஜரிவால் இருவரையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் வியாபாரிகள் சம்மேளம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள்கிழமை முதல் பொது முடக்கம் படிப்படியாக தளா்த்தப்படும் என்று முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தாா். கட்டுமானத் தொழில்களை மீண்டும் தொடங்கவும், தொழிற்சாலைகள் திறக்கப்படவும் முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இதேபோல கடைகள், வியாபார நிறுவனங்களையும் படிப்படியாக திறக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது விஷயத்தில் அரசுக்கு வியாபாரிகள் சம்மேளனம் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அதன் பொதுச்செயலாளா் பிரவீண் கண்டேல்வால் அறிக்கையில்தெரிவித்துள்ளாா்.
இதனிடையே வா்த்தகா்கள் மெய்நிகா் மூலம் சந்தித்துப் பேசினா். அப்போது கடைகள், வியாபார நிறுவனங்கள், சந்தைகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்றும் அவைகளை வெவ்வேறு நேரங்களில் திறக்கலாம் என்றும் பலரும் யோசனை தெரிவித்துள்ளனா்.
‘எங்கள் வியாபாரமே தடம்புரண்டு விட்டது. நிதி நெருக்கடியில் இருக்கும் வியாபாரத்தை எப்படி மீண்டும் சரி செய்வது என்று தெரியவில்லை. பணி நேரத்தை குறைப்பது, இரவுநேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம்’ என்றும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...