முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர்கள் ஆய்வு

பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை, தமிழக அமைச்சர்கள் அணையை நேரில் ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர்கள் ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் அமைச்சர்கள் ஆய்வு
Published on
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.70 அடியாக இருந்த நிலையில், கடந்த அக்.29-ம் தேதி அணையிலிருந்து ரூல் கர்வ் முறையை கடைப்பிடித்து, ஷட்டர்கள் வழியாக கேரளப் பகுதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டத்தை 142 வரை உயர்த்தாமல் அணையிலிருந்து உபரி நீர் என்ற பெயரில் கேரளப் பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாகவும், அதைக் கண்டித்து நவ.9-ல் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது.

கடந்த அக்.29-ம் தேதி முதல் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணைக்குச் சென்று நிலவரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவேரி தொழில்நுட்ப குழுமத் தலைவர் சுப்பிரமணியன், தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியாறு அணை தலைமை பொறியாளர் கிருஷ்ணன், கூடுதல் தலைமை பொறியாளர் ஞானசேகன் ஆகியோர் உடன் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com