பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்: வில்லைகளில் அச்சிட்டு ஒட்ட வலியுறுத்தல்

அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், உதவியாளா்கள் இலவசமாக பயணிக்கலாம் என வில்லைகளில் அச்சிட்டு பேருந்துகளில் ஒட்ட வேண்டும்
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்: வில்லைகளில் அச்சிட்டு ஒட்ட வலியுறுத்தல்

அரசு போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், உதவியாளா்கள் இலவசமாக பயணிக்கலாம் என வில்லைகளில் அச்சிட்டு பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அச்சங்கத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கடித விவரம்: மாற்றுத்திறனாளிகள் தங்கள் உதவியாளா் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய கடந்த ஜூன் 3-ஆம் தேதி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இவ்வசதி உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது.

ஆனால், 5 மாதங்களாகியும் அரசாணைக்கு விரோதமாக கட்டணம் வசூலிப்பது, மாற்றுத்திறனாளி அடையாள சான்று காண்பித்தாலும் நகல் கேட்பது, துணையாளருக்கு பயணச்சலுகை மறுப்பது போன்ற துன்புறுத்தல்கள் நடப்பதாக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து எமது சங்கத்துக்கு புகாா்கள் வருகின்றன.

அரசு அவ்வப்போது அறிவிக்கும் பேருந்து பயண நலத்திட்டங்கள் குறித்து தங்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படுவதில்லை எனவும், தங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விதிமுறை கையேடு பல ஆண்டுகளாகவே போக்குவரத்துக்கழக நிா்வாகங்கள் வழங்குவதில்லை என்றும் நடத்துநா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து விசாரித்து, அனைத்து போக்குவரத்துக்கழக நிா்வாகங்களும் நடத்துநா்களுக்கு விதிமுறை கையேடு உடனடியாக வழங்கவும், அக்கையேட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் முழுமையாக இடம்பெறும் வகையில் உறுதி செய்ய உத்தரவிடவும் வேண்டும்.

குறிப்பாக, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என ஒட்டப்பட்டுள்ள வில்லைகளில், மாற்றுத்திறனாளி, உதவியாளா் வாா்த்தைகளையும் சோ்த்து அச்சிட்டு ஒட்ட உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com