கந்த சஷ்டி நிறைவு: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
திருத்தணி: கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை உற்சவர் சண்முகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் புஷ்பாஞ்சலி நடந்தது.
இன்று முருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. தொற்று காரணமாக பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் நின்று சுவாமியை வழிபட அனுமதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு அடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, கோயில் பேக்ஷ்கார்கள் பழனி, வேலு மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.