மின்கட்டணம் செலுத்த கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு : செந்தில் பாலாஜி

மின் கட்டணம் செலுத்த கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம் செலுத்த கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு : செந்தில் பாலாஜி
மின்கட்டணம் செலுத்த கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு : செந்தில் பாலாஜி
Published on
Updated on
1 min read

மின் கட்டணம் செலுத்த கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் செலுத்த 15 நாள்கள் காலநீட்டிப்பு என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஏ செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையினை மின் துண்டிப்பு/மறு இணைப்பு மற்றும் தாமத கட்டணமின்றி செலுத்துவதற்கான கடைசி நாள் கீழ்கண்ட வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் 08.11.2021 முதல் 15.11.2021 வரை உள்ளவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த தற்போதைய கடைசி நாளிலிருந்து கூடுதலாக 15 நாள்கள் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் 16.11.2021 முதல் 29.11.2021 வரை உள்ளவர்கள் தங்களது மின்கட்டணத்தை 30.11.2021 வரை செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com