மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 11.11.2021 மாலை கரையை கடந்த நிலையில் 13.11.2021 அன்று தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து 15.11.2021 அன்று கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இந்திய ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (12.11.2021) கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
13.11.2021 வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
14.11.2021 திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.
15.11.2021 வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்
பெய்யக்கூடும்.