காா்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி, சேலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை பக்தர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி புதன்கிழமை சேலம் சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து கொள்ளும் பக்தர்கள்.
கார்த்திகை முதல் மார்கழி மாதம் கடைசி வாரம் வரை ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கம்.
சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
இந்த நிலையில் சேலம் குரங்குசாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சேலம் குரங்கு சாவடி சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி சரஸ்வதி மண்டபத்தில் 18 படிக்கட்டு தீபாரதனை ஏற்றும் பக்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.