ராசிபுரம்: நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலை-அறிவியல் கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராசிபுரம் அரசு கலை-அறிவியல் கல்லூரி முன்பாக, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்.
ராசிபுரம் அரசு கலை-அறிவியல் கல்லூரி முன்பாக, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர்.


ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலை-அறிவியல் கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதன்படி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ராசிபுரம், திருவள்ளுவர் அரசு கல்லூரி முன்பாக திரண்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். பெண்கள், மாணவியர்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மாணவ-மாணவியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com