
காங்கயம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காங்கயத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு,காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகை வளாகத்தில் சிவாஜி கணேசனின் உருவப் படத்திற்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், காங்கயம் வட்டாட்சியர் பி.சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.