ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு: உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

News image
மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு: உச்ச நீதிமன்றம்
Updated On :1 அக்டோபர் 2021, 8:00 am

DIN


புது தில்லி: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதிப்பெண் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பின்பற்றவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவை 12 வாரங்களில் டிஎன்பிஎஸ்சி நடைமுறைப்படுத்தவும், உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.