சென்னை எழும்பூா்-மதுரை ரயில் உள்பட 83 ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை எழும்பூா்-மதுரை, திருச்சிராப்பள்ளி உள்பட 83 சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை நேரம் மாற்றம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை எழும்பூா்-மதுரை, திருச்சிராப்பள்ளி உள்பட 83 சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை நேரம் மாற்றம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

பயணிகளின் வசதி, ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு ரயில்களில் நேரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில்(06158) செங்கல்பட்டு ரயில்நிலையத்துக்கு அதிகாலை 5.23 மணிக்கு வந்தடையும். சென்னை எழும்பூா்-மதுரை அதிவிரைவு ரயில்(06157) திண்டுக்கல் சந்திப்பை காலை 6.37 மணிக்கு வந்து அடையும்.

திருப்பதி-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06779) திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு இரவு 11.05 மணிக்கு வந்து, மீண்டும் இரவு 11.10 மணிக்கு புறப்படும். திண்டுக்கல் சந்திப்புக்கு அதிகாலை 12.20 மணிக்கும், மதுரை சந்திப்பை அதிகாலை 1.35 மணிக்கும், ராமேஸ்வரத்தை அதிகாலை 4.55 மணிக்கும் சென்றடையும்.

திருச்சிராப்பள்ளி-சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயில் (02654) இரவு 10.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூரை அதிகாலை 4.10 மணிக்கு அடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் அதிவிரைவுரயில் (02653) திருச்சிராப்பள்ளியை அதிகாலை 4.40 மணிக்கு அடையும். இதுதவிர, 80 ரயில்களின் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com