
மதுரை: மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
காந்தி ஜயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டம் என்பதால், இந்த முறை பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
மதுரை மாவட்டம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சி பதவிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டது. இதை மற்ற சமூகத்தினர் ஏற்கவில்லை. இதனால். 1996 முதல் இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்துவது சவாலாக இருந்தது.
பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் தனிச்செயலர் த.உதயச்சந்திரன், மதுரை மாவட்ட ஆட்சியர், ஊராட்சி தலைவர்கள்.
இந்நிலையில், 2006 இல் திமுக ஆட்சியின்போது இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்தப்பட்டு 10 ஆண்டு பிரச்னைக்கு அப்போதைய மாட்ட ஆட்சியர் த.உதயச்சந்திரன்(தற்போது முதல்வரின் தனிச்செயலர்) தீர்வு கண்டார்.
மேலும் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின், இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்துவதில் தீவிர கவனம் செலுத்தினார். அதன் காரணமாகவே, முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாப்பாபட்டி ஊராட்சியை தேர்வு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.