புதுப்பாளையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதிகள் பங்கேற்பு

மூத்த குடிமக்களுக்கான உரிமைகள், அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம், கரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் விழா
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர்.
Updated on
1 min read


அவிநாசி: மூத்த குடிமக்களுக்கான உரிமைகள், அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம், கரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்டவை அவிநாசி அருகே புதுப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகம், விழுதுகள் அமைப்பு ஆகியவை சார்பில், காந்தி ஜயந்தி, அனைத்துலக முதியோர் தின விழாவையொட்டி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.சுகந்தி, 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.அனுராதா, தலைமை கூட்டுறவு நீதித்துறை நடுவர் புகழேந்தி, அவிநாசி சார்பு நீதிபதி கே.சுரேஷ்குமார், வட்டாட்சியர் கே.பி.ராகவி,  ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரிபிரியா வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.ஈஸ்வரன், துணைத் தலைவர் சாமிநாதன், விழுதுகள் அமைப்பு நிறுவனர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், கரோனா நிவாரண உதவிகள், மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, ஆதரவற்ற விதவை பெண்கள் உதவித் தொகை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 

இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனம், நிலத் தகராறு, பட்டா மாறுதல் உள்ளிட்ட தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com