
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை உயர வாய்ப்புள்ளதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விலை உயர்வு காரணமாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் மூட்டை விலை குறைந்தபட்சம் ரூ.50 உயரக்கூடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளதே சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது.
நிலக்கரியின் விலை சமீபகாலமாக 3 மடங்கு வரை விலை அதிகரித்துள்ளது. ஒரு டன் ரூ.4 ஆயிரமாக இருந்த நிலக்கரி விலை, கடந்த மூன்று மாதங்களில் படிப்படியாக உயர்ந்து தற்போது, ரூ.12 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதனால் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. துணிகளில் சாயம் வெளுக்க நிலக்கரி பெருமளவு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.