
திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் ஸ்ரீரங்கத்தில் இன்று வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
திருச்சியில் கடந்த இரண்டு நாள்களாக ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள துர்காஸ்டாலின் நேற்று புதன்கிழமை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது, திருக்கோயில் அர்ச்சகர்கள் தரப்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவையும் பெற்றுக்கொண்டார்.
தங்களது பூஜை வழிபாடு தொடரவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி அந்த கோரிக்கை மனுவை திருக்கோயில் பட்டர்கள் அளித்தனர்.
முன்னதாக, உறையூர் வெக்காளியம்மன் கோயிலிலும் துர்காஸ்டாலின், அம்மனை வழிபட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.