வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது.
செம்பனார்கோயிலில் வன உயிரினம் பாதுகாப்பு அவசியம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி கீழமுக்குட்டு கடைவீதி வரை பேரணியாக சென்ற 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்.
செம்பனார்கோயிலில் வன உயிரினம் பாதுகாப்பு அவசியம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி கீழமுக்குட்டு கடைவீதி வரை பேரணியாக சென்ற 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்.


தரங்கம்பாடி:  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி  நடைபெற்றது.

நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா அறிவுறுத்தலின்படி, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் செம்பனார்கோயில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வன உயிரினம் பாதுகாப்பு அவசியம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி கீழமுக்குட்டு கடைவீதி வரை பேரணியாக சென்றடைந்தனர்.

இப்பேரணியில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் என்.எஸ்.குடியரசு, வனச்சரக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com