விழுப்புரம்: வீடூர் வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் சாவு

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வீடூர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் திடீரென மாரடைப்பால் இறந்தார்.
இறந்து போன ஆசிரியர் மாணிக்கவாசகம்
இறந்து போன ஆசிரியர் மாணிக்கவாசகம்
Published on
Updated on
1 min read


விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் வீடூர் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் திடீரென மாரடைப்பால் இறந்தார்.

இம்மாவட்டத்தில் 2 ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், வீடூர் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்கியிருந்த வாக்குச்சாவடி அலுலர் மாணிக்க வாசகம் (55) சனிக்கிழமை அதிகாலையில் மாரடைப்பால் இறந்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இவர், விழுப்புரம் இ.எஸ்.கார்டனில் குடியிருந்தார்.  இவர் வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார பட்டதாரி ஆசிரியர் ஆக பணியாற்றி வந்தார். ரத்த அழுத்த மாத்திரை எடுத்து வராததால் வெள்ளிக்கிழமை இரவு இவர் பதற்றமாக இருந்ததாக சக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

சனிக்கிழமை அதிகாலையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து சக ஆசிரியர்கள் இவரை அவசர சிகிச்சைக்காக பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிடாடதாக தெரிவித்தனர்.  இறந்த ஆசிரியர் மாணிக்கவாசகத்துக்கு
ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இது குறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com