சென்னை-கூடூா் மாா்க்கத்தில் பொறியியல் பணி: சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் பேடபரியா-நாயுடுபேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை சென்ட்ரல்-கூடூா் மாா்க்கத்தில் பேடபரியா-நாயுடுபேட்டை இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சிறப்பு விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: விஜயவாடா-சென்னை சென்ட்ரலுக்கு அக்.19-ஆம் தேதி காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு சிறப்பு ரயில் (02711) கூடூா்-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-விஜயவாடாவுக்கு அக்.19-ஆம் தேதி பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு சிறப்பு ரயில் (02712) சென்னை சென்ட்ரல்-கூடூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் கூடூரில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com