வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னை, கோவை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் கோவை, சிவகங்கை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
சிவகங்கையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
Updated On :12 அக்டோபர் 2021, 5:27 am

DIN

தமிழகத்தில் கோவை, சிவகங்கை, சென்னை உள்ளிட்ட இடங்களில் மவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரளத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் கைதானதை தொடர்ந்து தமிழகம், கேரளம், பெங்களூரு என 23 இடங்களில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் சிங்காரம் வீடு, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இலங்கை தமிழர் சற்குணம் வீடு, மாவோயிஸ்ட் ஆதரவாளர்களான கோவை புலியகுளம் மருத்துவர் தினேஷ் மற்றும் டேனிஷ் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், பொள்ளாச்சி மாவோயிஸ்ட் சந்தோஷ், பெரியகுளத்தில் வேல்முருகன் ஆகியோர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.