கரோனா சிகிச்சையில் இருப்போா் 15,650-ஆகக் குறைந்தது
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 15,650-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 15,650-ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, புதன்கிழமை மேலும் 1,279 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 173 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 82,137- ஆக அதிகரித்துள்ளது.
இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து புதன்கிழமை 1,453 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.30 லட்சத்தைக் கடந்துள்ளது.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 19 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,833-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...