
2021 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து சென்னையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு சில இடங்களில் குழுவாக கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
2021 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி கொல்கத்தாவை வீழ்த்தியது. இதன் மூலம் 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது.
கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் விமர்சிக்கப்பட்ட சென்னை அணி இம்முறை கோப்பையை வென்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அணி இதற்கு முன்பு 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து 4-வது முறையாக 2021 ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.