தீபாவளியைக் கொண்டாட ஊருக்குச் செல்வோர் கவனத்துக்கு..

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் குறைக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளிக்கு ஊருக்குச் செல்வோர் கவனத்துக்கு..
தீபாவளிக்கு ஊருக்குச் செல்வோர் கவனத்துக்கு..
Published on
Updated on
2 min read

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் குறைக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து சென்னைப் போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  2021 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்வார்கள், இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 01.11.2021 முதல் 03.11.2021 வரையிலும், பயணிகள் திரும்பி வருவதற்காக 05.11.2021 முதல் 08.11.2021 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆறு (06) வெவ்வேறு இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு இயக்க பேருந்து நிலையங்களுக்கு பயணிக்க மாநகர போக்குவரத்து கழகம் சிறப்பு இணைப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்கிறது.

பயணிகள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றவும். 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் , அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆம்னி பேருந்துகள் பின்வரும் வழித்தடங்களில் செல்லும்:-

கோயம்பேடு சிஎம்பிடியிலிருந்து அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூரில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்ல பூந்தமல்லி சாலை, வெளிவட்டச் சாலை வழியாக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குச் செல்லும்.

வழக்கம் போல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடையும். இந்த பேருந்துகள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

இதேபோல் கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் பூந்தமல்லி சாலை, வானகரம், நாசரத்பேட்டை, வெளிவட்ட சாலை வழியாக ஊரப்பாக்கம் அடைய வேண்டும். இந்த பஸ்கள் தாம்பரம், பெருங்குளத்தூர் வழியாக செல்லாது.

கிழக்கு கடற்கரை சாலை நோக்கி ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, கத்திபாரா, கிண்டி, சர்தார் படேல் சாலை (ஓஎம்ஆர், இசிஆர்) வழியாக போக்குவரத்து காவல்துறையின் ஒப்புதலுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் 100 அடி சாலை, பூந்தமல்லி சாலை, சிஎம்ஆர்எல், ஆலந்தூர் மெட்ரோ, கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஏறும் இடங்களைத் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக அந்த பயணிகளை கோயம்பேடு அல்லது ஊரப்பாக்கத்திலிருந்து ஏற்றிச் சொல்லலாம்.

அனைத்து பயணிகளும் மேற்கண்ட ஏற்பாடுகளை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டு, அனைத்து சாலைகளிலும் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து பயணிகளும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com