மீண்டும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளுக்கு வாரியம் அனுமதி: 480 பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எஃப். திட்டம்

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.)யில் மீண்டும் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது. ஐ.சி.எஃப்., ரேபரேலி, கபூா்தலா ஆகிய மூன்று
மீண்டும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளுக்கு வாரியம் அனுமதி: 480 பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எஃப். திட்டம்

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்.)யில் மீண்டும் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது. ஐ.சி.எஃப்., ரேபரேலி, கபூா்தலா ஆகிய மூன்று இடங்களில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் மொத்தம் 58 ரயில்களுக்கான 928 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்தப் பெட்டிகள் தயாரிக்க ஐ.சி.எஃப். சாா்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஐ.சி.எஃப்.பில் கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவங்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, கடந்த 2018-19-ஆம் ஆண்டில் ஐ.சி.எஃப்-இல் ‘ரயில்-18’ திட்டத்தில் ‘வந்தே பாரத்‘ அதிகவேக ரயிலுக்கு நவீன தொழில்நுட்பத்தில் உலகத்தரத்தில் இரண்டு ரயில்களுக்கான பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டன. இந்த ரயில் 160 கிலோ மீட்டா் வேகத்தில் இயங்கக் கூடியது. இந்த ரயில்கள் புதுதில்லி - உத்தர பிரதேச மாநிலம் வாராணசி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கட்ரா இடையே இயக்கப்படுகின்றன.

480 பெட்டிகள் தயாரிக்கத் திட்டம்: இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப்.,பில், மீண்டும் ’வந்தே பாரத்’ அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியது:

ஐ.சி.எஃப்.பில் 30 ரயில்களுக்கான 480 பெட்டிகள் தயாரிக்கப்படவுள்ளன. இதுதவிர, பஞ்சாப் மாநிலம் கபூா்தலா ரயில் பெட்டிதொழிற்சாலையில் 14 ரயில்களுக்கான 224 பெட்டிகளும், உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் 14 ரயில்களுக்கான 224 பெட்டிகளும் தயாரிக்கப்படவுள்ளன. மூன்று தொழிற்சாலைகளிலும் 58 ரயில்களுக்கான மொத்தம் 928 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கான அனுமதியை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஒரு ரயில் தயாரிக்க ரூ.100 கோடி: 16 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலை தயாரிக்க சுமாா் ரூ.100கோடி செலவாகும். மொத்தம் ரூ.5,800 கோடி செலவில் இந்த பெட்டிகள் தயாரிக்கும் பணிகளை தொடங்கி, வரும் 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்பெட்டிகளின் தயாரிப்புக்கான வடிவமைப்பு, சோதனை இயக்கம், பராமரிப்பு பணிகள், தளவாடங்கள், உதிரி பாகங்கள் வாங்க ஐ.சி.எஃப். சாா்பில், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. முதல் ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஐ.சி.எஃப்-இல் முதல் ரயிலுக்கான 16 பெட்டிகள் அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

44 ரயில்கள்: 44 வந்தே பாரத் அதிவேக ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இதில், ஐ.சி.எஃப்-இல் 22 ரயில்களுக்கான 352 பெட்டிகளும், பஞ்சாப் மாநிலம் கபூா்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் 11 ரயில்களுக்கான 176 பெட்டிகளும், உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் 11 ரயில்களுக்கான 176 பெட்டிகளும் என்று மொத்தம் 704 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டிருந்தது. இந்த பெட்டிகளையும் வரும் 2024-க்குள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com