
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் சுதந்திர நாள் 75 ஆவது (பவள விழா) ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த மினி மாரத்தான் இன்று (செப்.4) காலை நடைபெற்றது.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தின் எதிரே தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி.ராசேந்திரன், கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் அறங்காவலர் அ.வேதரத்னம், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா, பிரியம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
பின்னர் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள சர்தார் அ.வேதரத்னம், தியாகி வைரப்பன் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.