கரோனா காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது: தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர் நாள் வாழ்த்து

கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர் நாள் வாழ்த்து கூறியுள்ளார். 
கரோனா காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது: தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர் நாள் வாழ்த்து
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் ஆசிரியர் நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். நம்மை வளர்த்த தாய், தந்தையைப் போலவே முக்கியமானவர்கள் நம்முடைய ஆசிரியர்கள். அவர்கள் நமக்கு ஊட்டிய கல்வி அறிவு தான் நம்முடைய வளர்ச்சிக்கு பாதை போட்டு தருகிறது. 
கரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆசிரியர்கள் ஆற்றிவரும் சேவை மகத்தானது. தாய்-தந்தையைப் போல பரிவோடும் அக்கறையோடும் இணையவழி மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வரும் அவர்களின் பணி பாராட்டுக்கு உரியது. 

இப்படிப்பட்ட ஆசிரியர்களைப் போற்றும் விதமாக டாக்டர். சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com