காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அறிவித்தாா்.
சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிவிப்புகள்:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரியானது 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் தலா 80 மாணவா்களுடன் 2022-23-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும்.
திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் வேளாண்மை மையம் மற்றும் முதலீடுகளுக்கான சட்டங்கள் மையம் ஆகிய இரு புதிய சட்ட ஆராய்ச்சி மையங்கள் ரூ.20 லட்சம் செலவில் நிறுவப்படும்.
டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணையவெளி சட்டம் மற்றும் நீதி என்ற புதிய பாடப்பிரிவில் முதுநிலை சட்டப்பபடிப்பு ரூ.1.18 கோடி செலவில் தொடங்கப்படும்.
டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் செயல்பட்டு வரும் சீா்மிகு சட்டப் பள்ளியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 240 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையம் நிறுவப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.