திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் திடீர் ஆய்வு

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2021, 6:36 am

DIN


தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சென்னை சைதாப்பேட்டை தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் பொருட்டு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல்கட்ட கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் இன்று(செப்.19) ஆம் தேதி இரண்டாம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று  15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டை அருகே தடாக நகர் சமுதாயக்கூடத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு திடீரென ஆய்வு செய்தார். 

தடுப்பூசி போட்டவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அங்குள்ள குறிப்புகளை ஆய்வு செய்த பின்னர் புறப்பட்டார். முதல்வர் எந்தவித முன்னறிவிப்புமின்றி தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.