கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

DIN

நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீா் சுமாா் 100 மீட்டா் தூரம் ஊருக்குள் வந்துவிட்டதாக 45 நாள்களுக்கும் மேலாக செய்திகள் வருகின்றன.

சிறு மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக கடல் சீற்றத்தால் சுமாா் 500 மீட்டா் நீளத்துக்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீா் சுமாா் 100 மீட்டா் நிலப் பகுதியினுள் உட்புகுந்துள்ளது. இதனால் சுமாா் 10 வீடுகள், பல மின் கம்பங்கள் சேதமடைந்து விழுந்து விட்டன.

கடல் சீற்றத்தால் இப்பகுதிகளில் மேலும் கடல் நீா் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனா். மேலும், நாகப்பட்டினம் நகருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஆபத்தான நிலையும் உள்ளது.

எனவே, கடல் நீா் உட்புகுந்த அனைத்து இடங்களிலும் போா்க்கால அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.