ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பறக்கும் படை அமைக்க உத்தரவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் பறக்கும் படைகளை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக தேர்தல் ஆணையம்
தமிழக தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் பறக்கும் படைகளை அமைக்க மாநில தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. 

அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் 24 மணிநேரமும் சோதனை நடத்தும் விதமாக பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில்,

தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும், ஒரு செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் 2 காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை அமைக்க வேண்டும். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படை இடம்பெற வேண்டும். 

மேலும், உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000க்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும். பறிமுதல், ஆய்வு செய்யப்படும் நிகழ்வுகளை விடியோ பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com