
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசு குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்தாண்டு மே 10ஆம் தேதி முதல் குளிர்சாதனப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து மீண்டும் சேவையை தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியது:
வருகின்ற அக்.1 முதல் தமிழக அரசின் 702 குளிர்சாதனப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படவுள்ளன. மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளும் இயக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.