
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் செம்பனார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
செம்பனார்கோவில் லயன்ஸ் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் இராஜாராமன்,வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், புஷ்பலதா, ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் இமயவரம்பன், மாவட்ட முன்னாள் ஆளுநர் மருத்துவர் வீரபாண்டியன், மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் மதிவாணன் வரவேற்றார்.
இவ்விழாவில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு ஆசிரியர் பணியை பாராட்டி 36 ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.