உத்தரவை உடனடியாக திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம்: ரயில்வே நிர்வாகத்துக்கு வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை

உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே, உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெறவிலையென்றால
சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை சென்னையில் நியமித்து, சென்னையில் தேர்வு செய்யப்பட்டவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது இந்திய ரயில்வே, உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெறவிலையென்றால் நேரடி போராட்டத்தில் இறங்குவோம் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர்  ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 விண்ணப்பத்தாரக்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து உத்தரவிட்டுள்ளது. 

இது மிகவும் கண்டனத்துக்குரியது. உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். சென்னை தேர்வு வாரியத்தின் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை அந்த காலியிடங்களுக்கு நியமிக்க வேண்டும்.

2018 இல் ரயில்வே வாரியம் உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கும், டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. 

விண்ணப்பத்தாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எந்த ரயில்வேக்கு தேர்வு எழுதுகிறார்களோ அந்த ரயில்வேக்கு தான் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். வேறு ரயில்வேக்கு அவர்கள் நியமிக்கப்பட கூடாது. 

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களைவிட குறைவானதாகும். அதுமட்டுமல்ல இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும். 

ஏற்கனவே டெக்னீசியன் கேட்டகரியில் தெற்கு ரயில்வேக்கு விண்ணப்பித்தவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் வந்துள்ளார்கள். இது ரயில்வே அமைச்சர் எனக்கு கொடுத்த அந்த தகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணத்தி கோரக்பூர் ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிப்பது தெற்கு ரயில்வே விண்ணப்பத்தாரர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பதற்கு உதவுவதாக இருக்கிறது.

இதனையடுத்து, ரயில்வே அமைச்சர் உடனே தலையிட்டு கோரக்பூர் விண்ணப்பத்தாரர்களை கோரக்பூர் திருப்பி அனுப்பவும் தெற்கு ரயில்வேயின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அந்த உதவி ஓட்டுநர் காலியிடங்களில் நிரப்பவும் கோருகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com