பிச்சாவரம் படகு குழாம் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன்

பிச்சாவரம் படகு குழாம் பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் களஆய்வு மேற்கொண்டார்.
பிச்சாவரம் படகு குழாம் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன்
பிச்சாவரம் படகு குழாம் சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன்

பிச்சாவரம் படகு குழாம் பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் களஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம்  தலைமையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து களஆய்வு செய்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, சிதம்பரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகள்; சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகள் ஆகும், இங்குள்ள வெள்ளாறு மற்றும் கேலரூன் நதி அமைப்புகளால் ஒன்றோடு ஒன்று  இணைக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

பிச்சாவரம் படகு குழாம் 1984-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் 5 மோட்டார் படகுகள் மற்றும் 35 துடுப்பு படகுகள் மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 3 முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்; பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையில் படகு குழாம், பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றின் அடிப்படை கூட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்த அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

பிச்சாவரத்தில் சுற்றுலாத்தளத்தை ஆய்வு செய்யதுள்ளோம். பிச்சாவரம் புகழ்பெற்ற சுற்றுலாத்தளம், இந்த மாங்குரோவ் சதுப்புநில காடுகள் இந்தியாவில் இரண்டு இடங்களில் தான் உள்ளது. இங்குள்ள சுற்றுலாத்தளத்தில் வெளிநாட்டினர்  அதிகம் வந்து செல்ல கூடிய இடமாக உள்ளது. இந்த இடம் சுற்றுலாதளமாக அமைந்துள்ளதால் மக்களின் பயன்பாட்டிற்காக தங்கும் விடுதி மற்றும் கழிவறைகள் சீரமைக்கப்படும். சுற்றுலா தளத்தில் படகு சவாரி நேரத்தை காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படுத்த வனத்துறை அதிகாரிகளோடு பேசி முடிவு எடுத்துள்ளோம். 

சுற்றுலா பகுதியில் கூடுதல் வசதிகளாக கொண்டுவந்து பயணிகளை ஊக்குவிக்க எந்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும்.இங்குள்ள சுற்றுலா தள ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனரா என்று ஆய்வு மேற்கொண்டோம். கரானா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுகின்றனரா எனவும், பயணிகளுக்கு தற்காப்பு நடவடிக்கை அனைத்தையும் சொல்லித்தருகின்றனரா எனவும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் பிச்சாவரம் படகு குழாம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும், சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தங்கும் விடுதிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும், சுற்றுலா பயனிகளுக்கு தரமான உணவு அளிக்க உணவகங்கள் மற்றும் சுற்றுலா அலுவலருக்கு அலுவலகம் அமைக்கப்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடல் உணவு திருவிழாவாக கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்க பல்வேறு விழாக்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனத்துறையை சார்ந்த சின்னத்தீவினை ஆய்வு செய்தோம், அங்குள்ள கட்டடம் விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்(பொ) உதயகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட வன அலுவலர் சேகர், துணை இயக்குநர்(மீன்வளம்) வேல்முருகன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுற்றுலா மைய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com