சாத்தான்குளம்: குடியிருப்பு வீடு அருகே செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சாத்தான்குளம் அழகம்மன் கோவில் தெருவில் குடியிருக்கும் வீடு அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
சாத்தான்குளத்தில் குடியிருப்பு வீடு அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சாத்தான்குளத்தில் குடியிருப்பு வீடு அருகே செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சாத்தான்குளம் அழகம்மன் கோவில் தெருவில் குடியிருக்கும் வீடு அருகே தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு அழகம்மன்  கோவில் தெருவில் குடியிருப்பு வீடுகள் இருக்கும் பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் தொலைபேசி செல்போன் கோபுரம் அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி அப்பகுதி மக்கள் இதில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவர் கதிர்வீச்சால் அதில் பல பிரச்னைகள் ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து கோபுரம் அமைக்கக் கூடாது என தாசில்தார் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். 

மேலும் அதே பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான  பள்ளி சார்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரத்தில் உள்ள இடத்தில் திடீரென திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பரபரப்பு ஏற்பட்டது பொது மக்கள் எதிர்ப்பை மீறி செல்போன் கோபுர டவர் அமைக்கப்பட்டால் அதிகாரிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் ஆதலால் செல்போன் கோபுரம் அமைப்பதைக் கைவிட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com