வருமான வரிச் சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி: ஆர்.எஸ். பாரதி

திமுகவினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
வருமான வரிச் சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி: ஆர்.எஸ். பாரதி
வருமான வரிச் சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி: ஆர்.எஸ். பாரதி


தமிழகத்தில் இன்னும் 2 நாள்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுகவினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று திமுகவினருக்குச் சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது குறித்து ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது, ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் குடும்பச் செலவுக்காக ரூ.1.36 லட்சம் மட்டுமே இருந்தது. தொடர்ந்து இரண்டு நாள்களாக நடைபெற்ற சோதனைக்குப் பிறகு அந்தத் தொகையை அவர்களிடமே வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்துவிட்டனர்.

செந்தில் பாலாஜி வீட்டில் ரூ.8000 மட்டுமே இருந்துள்ளது. அண்ணாநகர் மோகன் மகன் கார்த்திக் வீட்டில் 2 லட்சம் மட்டுமே இருந்தது. எனவே வருமான வரித்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்கள்.

அதேவேளையில், திமுகவினர் அப்பழுக்கற்றவர்கள் என்று நிரூபிக்கக் காரணமாக இருந்த வருமான வரிச் சோதனைக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கேஷ்சுரினா டிரைவ் பகுதியில் வசிக்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோரது பங்களாவில் சந்தேகத்துக்குரிய வகையில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சுமாா் 10 அதிகாரிகள் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழு, அங்கு சோதனையை வெள்ளிக்கிழமை நடத்தியது. துணை ராணுவப் படையைச் சோ்ந்த 5 வீரா்கள் அங்கு நிறுத்தப்பட்டனா். சோதனை தொடங்கும்போது வெளியே சென்றிருந்த சபரீசன், தகவலறிந்ததும் வீட்டுக்கு விரைந்து வந்தாா்.

சபரீசன் நண்பா் அலுவலகம்: சபரீசன் நண்பரும், கட்டுமான நிறுவன உரிமையாளருமான பாலா வீட்டிலும் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள பாலா நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

அண்ணாநகா் 6-ஆவது அவென்யூவில் உள்ள திமுக எம்எல்ஏ எம்.கே.மோகனின் மகனும், அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலருமான காா்த்திக் வீட்டில் வருமானவரித்துறையினா் சோதனை செய்தனா்.

மதுபான நிறுவனத்தில் சோதனை: நந்தனம் சிஐடி நகரில் உள்ள எஸ்.என். ஜெயமுருகனுக்கு சொந்தமான தனியாா் மதுபான நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னையில் மொத்தம் 7 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

இதேபோல கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி,அவரது குடும்பத்தினா் வீட்டிலும் விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் வசிக்கும் சீனிவாசன்வீட்டிலும் சோதனை நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சரும்,ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜியின் நண்பா் சீனிவாசன் என கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் சுமாா் 28 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா். செந்தாமரை வீட்டில் சோதனை இரவு 7 மணியளவில் நிறைவு பெற்றது. சில இடங்களில் சோதனை இரவையும் தாண்டியும் நீடித்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com