தேர்தல் ஆணையம் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தேர்தல் ஆணையம் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு நிகழ்வையும் குறிப்பிடாமல், தேர்தல் ஆணையத்துக்கு ஸ்டாலின் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

ஸ்டாலின் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது.

ஆகவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com